தமிழில் அறிமுகமாகும் பிரபல பாலிவுட் நடிகர்!
பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் 'இது வேதாளம் சொல்லும் கதை' என்னும் புதிய படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் 'இது வேதாளம் சொல்லும் கதை' என்னும் புதிய படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.
புதுமுக இயக்குநர் ரத்தீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இது வேதாளம் சொல்லும் கதை'. இந்த படத்தில் அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவரை வைத்து சமாபேத்தில் போட்டோஷுட் ஒன்றையும் அந்த படக்குழுவினர் நடத்தி முடித்துள்ளனர்.
அவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்பபடத்தை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தன்னுடைய சமூக வலை தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அபய் தியோல் தொடர்பான காட்சிகள் ரைவில் ஹைதரபாத்தில் படமாக்கப்படும் என்று தெரிகிறது.