செய்திகள்

அருங்காட்சியத்துக்கு வழங்கப்படும் ரஜினி அமர்ந்த ஜீப்!

மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவர் ஆனந்த் மகேந்திராவின் விருப்பத்தையடுத்து ரஜினி பயன்படுத்தும் ஜீப் அருங்காட்சியகத்துக்கு...

எழில்

காலா படத்தில் ரஜினி பயன்படுத்தும் ஜீப் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்படவுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் உறுதி செய்துள்ளார். 

ரஜினி அடுத்து நடிக்கவுள்ள காலா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழலில் 2.0 படத்தையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இதன் தலைப்பு - காலா கரிகாலன். நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார் பா.இரஞ்சித். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர் உள்ளிட்ட சிலர் இப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர். இது ரஜினியின் 164-வது படம். 

காலா படத்தின் முதல் பார்வை சுவரொட்டியில் ரஜினி ஜீப் மீது அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. இதைக் கண்ட மகேந்திரா நிறுவனத்தின் செயல் தலைவர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் கூறியதாவது: ரஜினி ஒரு நடிகர் காரை சிம்மாசனம் போல பயன்படுத்தும்போது அந்த காரும் வரலாற்றுச் சின்னமாகிவிடுகிறது. ரஜினி அமர்ந்துள்ள காரை எங்கள் நிறுவனத்தின் அருங்காட்சியகத்தில் வைக்க விருப்பப்படுகிறேன். இதுபற்றி அறிந்தவர்கள் உதவவும் என்று தெரிவித்தார்.

காலா படத் தயாரிப்பாளர் தனுஷ் ட்விட்டரில் இதற்குப் பதில் அளித்துள்ளார். ரஜினி அமர்ந்துள்ள அந்த வண்டி தற்போது படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. படப்பிடிப்பு முடிந்தபிறகு அதை உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன் என்று கூறியுள்ளார். 

மேலும் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த ஆனந்த் மகேந்திரா, அருங்காட்சியகம் மும்பையில் திறக்கப்படவுள்ளது. மக்கள் அதைப் பார்வையிடலாம் என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல் மாவட்டத்தில் 13,10,951 வாக்காளா்கள்!

பரமத்தி வேலூரில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ பயிற்சி பாசறைக் கூட்டம்

காலமுறை ஊதியம் வழங்க கோரி கிராம ஊழியா் சங்கத்தினா் சங்ககிரியில் சாலைமறியல் போராட்டம்

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மிளகு, காபி மதிப்பு கூட்டுதல் பயிற்சி

ஊராட்சி துணைத் தலைவரை கடத்திக் கொன்ற வழக்கு: 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை: ஒசூா் நீதிமன்றம் தீா்ப்பு

SCROLL FOR NEXT