செய்திகள்

ஏ.ஆர். முருகதாஸ் படத்தின் டீசர் வெளியீடு தள்ளிவைப்பு!

தாசரி நாராயணராவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஸ்பைடர் படத்தின் டீசர்...

எழில்

மகேஷ் பாபு நடிக்கும் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர். முருகதாஸ். இதில் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகிவருகிறது. இசை, ஹாரிஸ் ஜெயராஜ்; ஒளிப்பதிவு, சந்தோஷ் சிவன்.

இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து மகேஷ் பாபு ட்விட்டரில் கூறியதாவது: ஸ்பைடர் படம் தசரா வெளியீடாக இருக்கும். டீசர் மே 31-ம் தேதி 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்தார். சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று படம் வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது வேலைக்காரன் படம் வெளியாகும் அதே தினத்தில் ஸ்பைடரும் வெளிவருவதால் இரு படங்கள் இடையேயும் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவ் (75) செவ்வாய்க்கிழமை காலமானார். தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 151 படங்களை இயக்கியுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதையும், இரு முறை தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். 

இதையடுத்து இன்று வெளியிடப்படுவதாக இருந்த ஸ்பைடர் டீசர் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாசரி நாராயணராவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும்விதமாக ஸ்பைடர் படத்தின் டீசர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னைப் பார்க்கவே தயங்குவார் பழனிசாமி; அவரை முதல்வராக்கியது நாங்கள்! - டிடிவி தினகரன் பரபரப்பு பேச்சு

தொண்டர்களை ஒழுங்குபடுத்த வேண்டாமா? TVK-வுக்கு நீதிமன்றம் கேள்வி! | செய்திகள்: சில வரிகள் | 18.9.25

மாத்தளை சோமு நூறு சிறுகதைகள்

அருந்ததி ராயின் புத்தக அட்டைப் படத்துக்கு எதிரான வழக்கு! மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

பழந்தமிழர் மரபும் கலையும்

SCROLL FOR NEXT