முகப்பு
செய்திகள்

தடைகளைத் தாண்டி நவம்பர் 24-ல் வெளிவரும் ராய் லட்சுமியின் ஹிந்திப் படம் ஜூலி 2!

முதல் பாகத்துக்கும் இந்தப் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று உரக்கச் சொல்லியபிறகும் இதுபோல நடந்துகொண்டார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:


தீபக் ஷிவ்தாசனி இயக்கத்தில் ராய் லட்சுமி, ரதி அக்னிஹோத்ரி, சாஹில், ஆதித்யா ஸ்ரீவஸ்தவா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் - ஜூலி 2.

2004-ல் நேஹா துபியா நடித்த ஜூலி படம் வெளிவந்தது. அப்படத்தைத் தயாரித்தவர் என்.ஆர். பச்சிஷியா. தற்போது தயாராகியுள்ள ஜூலி 2 படம் காப்புரிமை சட்டத்தை மீறியதாகச் சமீபத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் ஜூலி மற்றும் ஜூலி 2 தயாரிப்பாளர்களிடையே உடன்பாடு ஏற்பட்டத்தையடுத்து தமிழ் நடிகை ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள ஜூலி 2 படம் நவம்பர் 24 அன்று வெளிவரவுள்ளது. ஜூலி 2 படம் வெளிவருவதற்காக சந்தித்த பிரச்னைகள் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் பஹ்லாஜ் நிஹாலினி கூறியதாவது:

ஒரு வழக்கறிஞருக்கு வழங்கவேண்டிய தொகையை விடவும் குறைவான தொகையையே அவருக்கு வழங்கினோம். ஆனால் திரையுலகினர் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பச்சிஷியா தகர்த்துவிட்டார். சட்டரீதியாக ஒரு படம் சந்திக்கும் சிக்கல்களை அவர் நன்கு அறிவார். இருந்தும் எங்கள் படத்தின் மீத ஜூலி 2 படம் காப்புரிமைச் சட்டத்தை மீறியுள்ளதாக பொய்யாக வழக்கு தொடுத்தார். முதல் பாகத்துக்கும் இந்தப் படத்துக்கும் எவ்விதச் சம்பந்தமும் இல்லை என்று உரக்கச் சொல்லியபிறகும் இதுபோல நடந்துகொண்டார். இதனால் மூன்று முறை வெளியீட்டுத் தேதி தள்ளிப்போனது. கடைசியில் படம் நவம்பர் 24 அன்று வெளிவரவுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.