முகப்பு
செய்திகள்

கமல் - மம்தா பானர்ஜி சந்திப்பு!

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் இன்று சந்தித்துள்ளார்.... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

கடந்த சில மாதங்களாக அரசியல் களம் குறித்து விமர்சித்து வரும் கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக்கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து கட்சி தொடக்கப் பணிகளில் அவர் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகளுடன் அவ்வப்போது கலந்து ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில் கமல், மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் இன்று சந்தித்துள்ளார்.

இன்று காலை கொல்கத்தாவுக்குப் புறப்பட்டுச் சென்ற கமல், அங்கு நடைபெறும்  சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்துகொண்டார். அதன்பின்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கமல் சந்தித்து உரையாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.