முகப்பு
செய்திகள்

நவம்பர் 24-ல் நடிகை நமீதாவுக்குக் கல்யாணம்!

இதுதொடர்பான தகவல், பிக் பாஸ் புகழ் ரைஸாவின் ட்விட்டர் பக்கத்தில், வீடியோ வழியாக வெளியிடப்பட்டுள்ளது... 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதாவுக்கு வருகிற 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

இதுதொடர்பான தகவல், பிக் பாஸ் புகழ் ரைஸாவின் சமூகவலைத்தளப் பக்கங்களில் வீடியோ வழியாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரைஸா உள்ளிட்ட நண்பர்களுடன் இணைந்து தன் திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நமீதா. 

நானும் வீரேந்திராவும் நவம்பர் 24 அன்று திருமணம் செய்யவுள்ளோம். உங்கள் அனைவருடைய அன்பும் ஆதரவும் தேவை என்று குதூகலமாக தன் வருங்கால கணவர் வீர் உடன் இணைந்து இச்செய்தியைப் பகிர்ந்துள்ளார் நமீதா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.