மலேசியாவில் நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலை விழா!
ஜனவரி 6, 2018 அன்று மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா நடைபெறவுள்ளது...
ஜனவரி 6, 2018 அன்று மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனவரி 6, 2018 அன்று மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா நடைபெறவுள்ளது. இதுதவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றையும் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தவுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம்போல சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம் ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள். ரஜினி, கமல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்துப் போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. கால்பந்துப் போட்டியில் மலேசிய நடிகர்கள், தமிழ்த் திரைப்பட நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நட்சத்திர கலை விழா பற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அறிவித்தார்கள்.
நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கைச் சந்தித்து நட்சத்திரக் கலை விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர். நட்சத்திரக் கலை விழா மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்விழா மலேசிய புக்கிஜாலி அரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.