முகப்பு
செய்திகள்

கடவுளிருக்கான் குமாரு: ட்விட்டரில் தத்துவ மழை பொழியும் இயக்குநர் செல்வராகவன்!

வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் நாம் எத்தனை விஷயங்களை தேவையில்லாது செய்துகொண்டிருக்கிறோம் என்பது புரியும் என இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் நாம் எத்தனை விஷயங்களை தேவையில்லாது செய்துகொண்டிருக்கிறோம் என்பது புரியும் என இயக்குநர் செல்வராகவன் கூறியுள்ளார். 

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:

வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கப் பழகிப் பாருங்கள். முதலில் மிகக் கடினம். ஆயின் பழகி விட்டோம்... நிம்மதியின் பொருள் புரியும். பின் நாம் எத்தனை விஷயங்களை தேவையில்லாது செய்துகொண்டிருக்கிறோம் எனப் புலப்படும். பின்னர் ஒருநாள் சரியாக வேலை செய்யாது தூங்கினால் கூட மனம் முள்ளாய் குத்தும். 

விடியலை பார்த்துக்கொண்டே உழைப்பது ஒருவகை. விடியல் வரும் என்ற நம்பிக்கையிலேயே உழைப்பது இரண்டாவது வகை. நான் இரண்டாவது வகை. ஆனால் எப்போதும் விடிந்திருக்கின்றது என்கிற ட்வீகளுடன் #வாழ்க்கையேநம்பிக்கை #கடவுளிருக்கான்குமாரு என்கிற ஹேஷ்டேக்குகளையும் பயன்படுத்தியுள்ளார்.

செல்வராகவன் - சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் தொடங்கவுள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இதுதவிர, எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.