செய்திகள்

நீடிக்கும் பத்மாவதி பட சர்ச்சை: மறு தணிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

எழில்

பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவதி படத்தை மறு தணிக்கை செய்யவேண்டும் என்று வழக்கறிஞர் எம் எல் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த ராணி பத்மினியின் கதையை அடிப்படையாகக் கொண்டு ஹிந்தி மொழியில் தயாரிக்கப்பட்ட படம் 'பத்மாவதி'. அந்தப் படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். ராணி பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படமானது வரும் டிசம்பர் 1-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

ஆனால், வரலாற்று நிகழ்வுகளை தவறாகச் சித்திரித்து அந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி ராஜபுத்திர சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராணி பத்மாவதியின் அழகில் மயங்கிய தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவரை அடைய முற்பட்டதாக அந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிகிறது. அது உண்மையான வரலாற்று நிகழ்வல்ல என்று கூறியே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

பத்மாவதி படத்துக்கு எதிராக ராஜபுத்திர சமூகத்தினரும், பாஜக தலைவர்கள் சிலரும் போர்க்கொடி உயர்த்தி வரும் நிலையில், இஸ்லாமிய சமூகத்திலும் அதனை வெளியிடக் கூடாது என வலியுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அஜ்மீர் தர்கா திவான் ஜைனுல் ஆபிதின் அலி கான், பத்மாவதி படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியை சாடி கருத்து தெரிவித்துள்ளார்.

வரலாற்று உண்மைகளுக்குப் பொருந்தாத வகையில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்துக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பத்மாவதி திரைப்படத்துக்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், பத்மாவதி படத்தை மறு தணிக்கை செய்யவேண்டும் என்று வழக்கறிஞர் எம் எல் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பத்மாவதி படத்தில் ராஜபுத்திரர்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் படத்திலுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT