செய்திகள்

அஜித் - இயக்குநர் சிவா இணையும் 4-வது படம் - விசுவாசம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

விசுவாசம் படமும் வெற்றியடைந்தால் ஐந்தாவது முறையாக அஜித் - சிவா இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை...

எழில்

அஜித் - சிவா மீண்டும் இணையும் படத்துக்கு விசுவாசம் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வத் தகவல் இன்று வெளியாகியுள்ளது.

அஜித் நடிப்பில் சிவா இயக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாகவுள்ளது. 2018 தீபாவளி அன்று படம் வெளியாகும் என்று அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கிவருகிறார். 

சிவா இயக்கிய வீரம்  படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தால் படத்தில் நடித்தார் அஜித். அதற்குப் பிறகு வேதாளம் படத்தில் தொடங்கி விசுவாசம் வரை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் சிவாவின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் அஜித். 

இதற்கு முன்பு சிவாவின் இயக்கத்தில் நடித்த மூன்று படங்களும் வசூலில் சாதனை செய்ததால் மீண்டும் அவருக்கு வாய்ப்பளித்துள்ளார் அஜித். விசுவாசம் படமும் வெற்றியடைந்தால் ஐந்தாவது முறையாக அஜித் - சிவா இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT