பிக் பாஸ் வீட்டில் சாகஸக்காரன் யார்? இறுதிநாள் கொண்டாட்டங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாள் கொண்டாட்டம் பிரம்மாண்டமான முறையில் கோலாகலமாக
தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிநாள் கொண்டாட்டம் பிரம்மாண்டமான முறையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. பிக்பாஸ் போட்டியின் முதல் சீசன் 1 வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவைப் பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அவர் ஆரவ்விடம் என்ன பேசுவார் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவருக்கும் இருக்க, ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கிறார் ஓவியா. ஹாய் ஆரவ், எப்படி இருக்க, நீ உடல் மெலிந்துவிட்டாய், நிறைய மெலிந்துவிட்டாய் என்று சொன்னார் ஓவியா.
நிகழ்ச்சியில் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையைக் கூறினார் கமல், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களைக் காப்பாற்ற இதுவரை 76,76,53, 065 வாக்குகள் வந்துள்ளது என்றார். இந்த எண்ணிக்கையைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதில் இன்னும் பத்து சதவிகித ஆர்வத்தை வேறொரு வாக்கு அளிக்கும்போதும் காண்பிக்க வேண்டும் என்றார் கமல். மேலும் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் கமல்ஹாசன் நெகிழ்ச்சியாகப் பேசினார். நான் ஆசையில் வரவில்லை என்றும், அன்பிற்காக வருகிறேன், கடமையில் வருகிறேன் என்றுக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியவை, 'உங்கள் வேலைதான் என்னுடைய கடமை, என்னுடைய வாழ்வு. நீங்கள் என்னை நடிக்கச் சொன்னால் நடிக்கிறேன். இல்லை உனக்கு வேற வேலை கொடுத்திருக்கிறோம் அல்லவா, அதனைச் செய் என்றாலும் செய்கிறேன் என்றார். வேறு யாரேனும் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களுக்கு சேவகம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.
அதன் பின் அபூர்வ சகோதரர்கள் படப் பாடலான அண்ணாத்த ஆடுறாரு பாடலுக்கு படு ஸ்டைலகாக நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினார் கமல்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழமையாகப் போட்டியாளர்களுக்கு விருது கொடுக்கப்படும். சில விருதுகள் சந்தோஷத்தையும் சில விருதுகள் வருத்தத்தையும் அளிந்துவந்தாலும், கடைசியில் கொடுக்கப்பட்ட இந்த விருது போட்டியாளர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது.
விருதுகளின் விபரம்
ஹரிஷ் - சுட்டி,
கணேஷ் வெங்கட்ராம் - ஒழுக்கமானவர்
சினேகன் - உழைப்பாளி, அணைக்கும் கரம், அதிபுத்திசாலி, சாகஸக்காரர்
பிந்து மாதவி, ஏதார்த்தமானவர், அமைதிப்படை, செல்லப் பிள்ளை
ஆரவ் - காதல் மன்னன், சாகஸக்காரர்