முகப்பு
செய்திகள்

ராஜ் டிவி இயக்குனர் மகளை மணக்கிறார் பிரபல தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன்!

'இறைவி', 'காதலும் கடந்து போகும்', 'சிங்கம் 3', 'பாம்புச் சட்டை', 'சதுரங்க வேட்டை 2' உள்ளிட்ட

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:56 PM
பகிர்:


'இறைவி', 'காதலும் கடந்து போகும்', 'சிங்கம் 3', 'பாம்புச் சட்டை', 'சதுரங்க வேட்டை 2' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த அபி & அபி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநனராகவும் துணைத் தலைவராகவும் அபினேஷ் இளங்கோவன் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் ராஜ் டிவி இயக்குனர்களின் ஒருவரான எம்.ரவீந்திரனின் மகள் நந்தினிக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமண நாளை அறிவிக்கவும் அழைப்பிதழ் வழங்கவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்பில் சித்ரா லட்சுமணன், இளங்கோவன், ரவீந்திரன் ஆகியோர் இரு வீட்டார் சார்பில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அக்டோபர் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று இவர்களின் திருமண நிகழ்வு திருவான்மியூரில் நடைபெறவுள்ளது. சின்னத் திரை மற்றும் வெள்ளித் திரை நட்சத்திரங்கள் பலர் இவர்களின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.