பின்னணியில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டர்: சமூகவலைத்தளத்தில் கவனம் பெற்ற கமல் - விஜய் புகைப்படங்கள்!
மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் தழுவல் என்று சொல்லப்படும் வேளையில் அப்படத்தின் போஸ்டரின் அருகில் நின்றுகொண்டு..
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் - மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது தயாரிப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் மெர்சல் படத்தை விஜய், அட்லி ஆகியோருடன் சேர்ந்து பார்த்தார் கமல். இதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அபூர்வ சகோதரர்களின் படம் தொடர்பான போஸ்டரின் அருகே நின்று கமலுடன் இணைந்து படக்குழுவினர் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்கள்.
மெர்சல் படம் அபூர்வ சகோதரர்கள் படத்தின் தழுவல் என்று சொல்லப்படும் வேளையில் அப்படத்தின் போஸ்டரின் அருகில் நின்றுகொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.