செய்திகள்

நடிகை அசினுக்குப் பெண் குழந்தை பிறந்தது!

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (37) நடிகை அசினும் (30) கடந்த வருடம் ஜனவரி 19-ம் தேதி..

எழில்

பிரபல நடிகை அசினுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது.

மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவும் (37) நடிகை அசினும் (30) கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார்கள். இதனையடுத்து கடந்த வருடம் ஜனவரி 19-ம் தேதி அன்று இருவருக்கும் தில்லியில் கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. பிறகு, படங்களில் நடிக்கப்போவதில்லை என்று ஓர் அறிக்கையில் அசின் தெரிவித்தார். 

இந்நிலையில் அசினுக்கு மகள் பிறந்திருப்பதாக ராகுல் சர்மா ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். எங்கள் இருவருக்கும் கடந்த 9 மாதங்களும் சிறப்பான தருணங்கள் ஆகும். எங்கள் மீது அன்பு செலுத்திய அனைவரும் நன்றி என்று அவர் கூறியுள்ளார். 

நடிகர் அக்‌ஷய் குமார், மருத்துவமனைக்கு நேரில் சென்று அசின் - ராகுல் சர்மா தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குழந்தையைக் கையில் ஏந்திக்கொண்டு எடுத்த புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

பிகாரில் நவ. 6-இல் வாக்குப்பதிவு: பிரசாரம் முடிவு!

ஐஸ் குல்பி... சாக்‌ஷி மாலிக்!

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’? வாக்குப்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT