முகப்பு
செய்திகள்

'பிக்பாஸ்' புகழ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் தமிழ்ப்படம்! 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெற்றிகரமாக முடிந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வான ஆரவ், ஹீரோவாக நடிக்கும் புதிய தமிழ்ப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:58 PM
பகிர்:

சென்னை: சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெற்றிகரமாக முடிந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றியாளராகத் தேர்வான ஆரவ், ஹீரோவாக நடிக்கும் புதிய தமிழ்ப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமீபத்தில் வெற்றிகரமாக முடிந்த 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் முதல் சீசனில் விளம்பர மாடலும், நடிகருமான ஆரவ் வெற்றியாளராகத் தேர்வானார். இதற்குப் பிறகு அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருவதாக கூறப்பட்ட நிலையில், அவர் கதாநாயகனாக நடிக்கும புதிய படம் பற்றிய அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் 'சிலாம்பாட்டம் என்ற படத்தினை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் சரவணன். பின்னர் கெளதம் கார்த்திக், லட்சுமி மேனன் நடிப்பில் 'சிப்பாய்' என்ற படத்தினை இயக்கினார். ஆனால் படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்பொழுது அவர் இந்த படத்தினை இயக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பிறகு ஆரவ் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளார். எனவே அவரை எனது படத்தில் கதாநாயகனாக நடிக்க  வைத்தால் நன்றாக இருக்கும் என்று முடிவெடுத்தேன். இது முழுக்க பெரும்பான்மையினருக்கான பொழுதுபோக்கு படமாக இருக்கும். கதை கிராமம் மற்றும் நகரம் இரண்டிலும் நடைபெறுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பிற பாத்திரங்களுக்கான நடிக நடிகையர் தேர்வு குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. படப்பிடிப்பினை நவம்பர் மாதம் முதல் துவக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இதற்கு முன்பாக நடிகர் ஆரவ் சைத்தான், காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →