முகப்பு
செய்திகள்

செல்வராகவன் - சூர்யா படம்: புதிய தகவல்!

என் கனவுப்படம் என்று கூறினார் இயக்குநர் செல்வராகவன். சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை...

Updated On : 30 அக்டோபர், 2017 at 11:41 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:29 PM

என் கனவுப்படம் என்று கூறினார் இயக்குநர் செல்வராகவன். சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார். அதை இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

செல்வராகவன் - சூர்யா இணையும் படம் ஜனவரி மாதம் முதல் தொடங்கும் என அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் கூறியுள்ளார். தீபாவளி வெளியீடு என்கிற கூடுதல் தகவலையும் அவர் தந்துள்ளார். சிறந்த நடிகரான சூர்யாவை இயக்குவது பெருமையாக உள்ளது என்று செல்வராகவனும் நம் திரையுலகின் சிறந்த இயக்குநரான செல்வராகவன் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என சூர்யாவும் ட்விட்டரில் பதிவுகள் எழுதியுள்ளார். 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தில் நடித்துவருகிறார் சூர்யா. பொங்கல் அன்று இப்படம் வெளிவருகிறது. சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் மன்னவன் வந்தானடி படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இதுதவிர, எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்தையும் செல்வராகவன் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.