முகப்பு
செய்திகள்

2.0 படத்துக்குப் பிறகுதான் காலா: ரஜினி தகவல்

திடீரென ஜனவரி 26-ம் தேதியே வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி படங்களின் வெளியீடு குறித்த குழப்பங்கள்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருவதால் இதன் கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் உருவாகிவருகிறது. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர். முதலில், இந்தப் படம் ஏப்ரல் 13 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென ஜனவரி 26-ம் தேதியே வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் ரஜினி படங்களின் வெளியீடு குறித்த குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 

அடுத்தடுத்த நாள்களில் அக்‌ஷய் குமாரின் படங்கள் வெளியாவது சாத்தியமில்லை. எனவே, 2.0 படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் எனத் தெரிகிறது. இதனால் தற்போது பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் காலா படம் 2.0-க்கு முன்பு பொங்கலன்று வெளியாகும் எனச் செய்திகள் வெளியாகின. 

ஆனால் இச்செய்தியை ரஜினியே தற்போது மறுத்துள்ளார். நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, காலா படத்துக்கு முன்பு 2.0 படம்தான் வெளியாகும் எனத் தெரிவித்தார். அதேபோல தனுஷின் வுண்டர்பார் பட நிறுவனமும், காலா படம் பொங்கலுக்கு வெளிவராது என்று ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.