முகப்பு
செய்திகள்

விஐபி 2: தமிழ்நாட்டில் 25 நாள்களில் ரூ. 27 கோடி வசூல்!

உலகம் முழுக்க 1000 திரையரங்குகளில் வெளியானது. வேலையில்லா பட்டதாரி 2...

Updated On : 6 செப்டம்பர், 2017 at 2:49 PM
பகிர்:

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள். இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 11 அன்று உலகம் முழுக்க 1000 திரையரங்குகளில் வெளியானது. வேலையில்லா பட்டதாரி 2, முதல் மூன்று நாள்களில் ரூ. 24 கோடி வசூலித்தது.

இந்தப் படம் நேற்று தனது 25-வது நாளைக் கொண்டாடியது. இதற்காக செளந்தர்யா படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்வீட் வெளியிட்டார். இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் 25 நாள்களில் ரூ. 27 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.