முகப்பு
செய்திகள்

ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ‘அர்ஜுன் ரெட்டி’ கதாநாயகி!

இப்படத்தின் கதாநாயகியாக அர்ஜுன் ரெட்டி என்கிற சமீபத்திய தெலுங்கு ஹிட் படத்தில் நடித்த ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியுள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

பி. சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் - 100% லவ். இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகியாக அர்ஜுன் ரெட்டி என்கிற சமீபத்திய தெலுங்கு ஹிட் படத்தில் நடித்த ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் படத்தை இயக்கிய சுகுமாரின் தயாரிப்பில் பேக் வாட்டர்ஸ், நடாஷா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளரும், பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஃப்ரெட் மர்பியிடம் பணியாற்றியவருமான MM.சந்திரமௌலி, இதன் தமிழ் ரீமேக் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ், கதாநாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, சிங்கம் எனப் பல ஹிந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய டட்லி இப்படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறார்.

முதலில் ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக லாவன்யா திரிபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து ஷாலினி பாண்டே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டனில் படமாக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.