செய்திகள்

மகளிர் மட்டும் படத்துக்கு பெண்கள் அளித்துள்ள ரேட்டிங்!

தலைப்பை ஒட்டியே நாலு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. பிரம்மா இயக்கத்தில்

DIN

தலைப்பை ஒட்டி நாலு பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா பிரபாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

கதை - 4 பெண்கள் - 72 மணி நேரம் முழுக்க முழுக்க தங்களுக்காக வாழ முடிவு செய்கின்றனர். எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல் பயணம் செய்கின்றனர். எதைத் தொலைத்தோம் என்பதை தெரிந்து கொண்டு அதைத் தேடிக் கண்டடைந்தார்களா என்பதுதான் இப்படத்தின் கதை.

ஜோதிகா இந்தப் படத்தில் சொந்தக் குரலில் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்தப் படம் நகைச்சுவையுடன் கூடிய Feel good வகைப் படமாக இருக்கிறது என்றனர் மாலில் படம் பார்த்த பெண்கள் குழு. 

கதையோட்டமும், கதையை சொன்ன விதமும் பாராட்டைப் பெற்றுள்ளது. ஜிப்ரானின் இசை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ப்ளஸ்

திரைக்கதையும் அதைப் படமாக்கிய விதமும்

பாடல்கள், பின்னணி இசை

மென் உணர்வைத் தூண்டுவதாக அமைந்ததுள்ளது

எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துவிட்ட கதையம்சம்

மைனஸ்

இரண்டாம் பாதி அதிகளவு மெலோ ட்ராமா

பெண்கள் கொடுத்துள்ள ரேட்டிங் : 3.5 / 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாராந்திர ரயில்களின் சேவைகள் நீட்டிப்பு

அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடி வரும் கடகத்துக்கு: தினப்பலன்கள்!

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

தேமுதிக இண்டி கூட்டணிக்கு வரவேண்டும்: ஜோதிமணி எம்.பி.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

SCROLL FOR NEXT