செய்திகள்

சாஹூவுக்குப் பிறகு ஷிரத்தா கபூரின் அடுத்த படம்?!

ஷிரத்தா சமீபத்தில் ‘சாஹூ’ திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்திருந்தார். வேலையோடு வேலையாக அப்படியே தனது அடுத்த படத்தின் இன்ஸ்பிரேஷனான சாய்னாவையும் சந்திக்க வேண்டும்

சரோஜினி

நடிகை ஷிரத்தா கபூர் தற்போது ஒப்பந்தமாகியிருக்கும் ‘சாஹூ’ படத்தை முடித்து விட்டு அடுத்ததாக நடிக்கவிருப்பது ஒரு விளையாட்டு வீரங்கனையில்  வாழ்க்கைச் சித்திரத்தில். யாரந்த வீரங்கனை தெரியுமா? 2012 ஆம் ஆண்டில் லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு வெண்கலம் பெற்றுத் தந்த பேட்மிண்டன் மங்கை சாய்னா நெய்வால் தான் அவர்.

ஷிரத்தா சமீபத்தில் ‘சாஹூ’ திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் வந்திருந்தார். வேலையோடு வேலையாக அப்படியே தனது அடுத்த படத்தின் இன்ஸ்பிரேஷனான சாய்னாவையும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில், கடந்த வாரம் சாய்னா வீட்டுக்குச் சென்றார் ஷிரத்தா கபூர். இதை சம்மந்தப்பட்ட இருவருமே அவரவர் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் புகைப்படமாகப் பதிவு செய்துள்ளனர்.

சாய்னாவின் வீட்டுக்குச் சென்ற ஷிரத்தா கபூர், அவரிடம் பேட்மிண்டன் பயிற்சி பெறுவது மாதிரியான புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அது மட்டுமல்ல சாய்னாவின் வீட்டிலிருந்தது குறைந்த நேரமே என்றாலும், அதையும் அருமையாகப் பயன்படுத்திக் கொண்டு சாய்னாவின் செல்ல நாய்க்குட்டி சாப்ஸியுடன் விளையாடி விட்டு, சாய்னாவின் அம்மா, அன்போடு சமைத்துப் போட்ட ஹைதராபாத் ஸ்பெஷல் வீட்டு உணவையும் ஒரு கை பார்த்து விட்டுச் சென்றிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT