செய்திகள்

யார் உள்ளே? யார் வெளியே? பிக் பாஸ் கடைசி வார பரபரப்பு!

ஒரு போட்டின்னு வந்துட்டா நான் யாருக்காகவும் பார்க்க மாட்டேன், அதில் ஜெயித்தே தீர வேண்டும் என்ற தரப்பு

DIN

ஒரு போட்டின்னு வந்துட்டா யாருக்காகவும் பார்க்க மாட்டேன், அதில் ஜெயித்தே தீர வேண்டும் என்ற தரப்பை எடுத்து அதில் உறுதியாகவும் ஒருவித போராட்ட குணத்துடனும் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர் சுஜா. இந்நிலையில் இந்த வாரம் அவரும் கணேஷ் வெங்கட்ராமும் குறைந்த அளவே ஓட்டுப் பெற்றிருப்பதாக கமல் அறிவித்திருந்தார். இந்த இருவரில் வெளியேறப் போகும் நபர் யார் என்று இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.

பிக் பாஸ் போட்டி முடிவடைய ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் கடைசி கட்டம் பரபரப்பாக உள்ளது. கணேஷ் அல்லது சுஜா வெளியேற்றப்படவேண்டிய சூழலில் உள்ளார்கள். ஆனால் இவர்களில் ஒருவரை சினேகன் தன்னுடைய புள்ளிகளை தந்து உதவிக் காப்பாற்றலாம் என்று கமல் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே சுஜாவுக்கு சில உதவிகள் செய்திருக்கிறார் சினேகன். எனவே இந்தச் சமயத்தில் அவர் கணேஷைத் தான் காப்பாற்றுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சுஜா தான் வெளியேறக் கூடிய நபர் என்றும் கணிக்கிறார்கள் ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உன்னோட வாழ... வைரலில் அஜித் - ஷாலினி!

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள 65 தொகுதிகள்! அமித் ஷாவிடம் பட்டியல் வழங்கிய நயினார்!

உத்தரப் பிரதேசம்: மக்களை அச்சுறுத்திய ஓநாயை சுட்டுக்கொன்ற வனத்துறை

சபரிமலையில் 25 லட்சம் பேர் சுவாமி தரிசனம்! மாற்றி யோசித்த பக்தர்கள்! ஆனால்

ஜோர்டான் புறப்பட்டார் மோடி!

SCROLL FOR NEXT