செய்திகள்

காவ்யா மாதவனைக் கைது செய்யும் திட்டம் இல்லை: காவல்துறை தகவல்

கேரள நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவன் மீது புகார் இல்லை. எனவே அவரைக் கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை..

எழில்

கேரள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி, மலையாள நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் காவ்யா மாதவனைக் கைது செய்யும் திட்டமில்லை என்று காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  

கேரள நடிகை, கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொண்டு திரும்பியபோது காரில் மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டார். காரில் சுமார் 2 மணி நேரத்துக்கு அவருக்குப் பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்த மர்ம நபர்கள், பின்னர் அவரை இறக்கிவிட்டு சென்று விட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பல்சர் சுனில் என்பவர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தில் நடிகர் திலீப், அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோருக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பை கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி போலீஸார் கைது செய்தபோது காவ்யாவிடமும், அவரது தாயாரிடமும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். கைதுக்குப் பிறகு அலுவா கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், ஜாமீன் கேட்டு 4 முறை தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

இந்தச் சூழலில், இந்த வழக்கு தொடர்பாக அவரது மனைவி காவ்யாவையும் போலீஸார் கைது செய்வார்கள் என்று செய்திகள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து, முன்ஜாமீன் கோரி காவ்யா மாதவன் கேரள உயர்நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கேரள நடிகை கடத்தல் வழக்கில் காவ்யா மாதவன் மீது புகார் இல்லை. எனவே அவரைக் கைது செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று காவல்துறை தகவல் தெரிவித்தது. இதையடுத்து, இந்த ஜாமீன் மனுவைப் பரிசீலிக்கத் தேவையில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. காவ்யா மாதவன் இந்த வழக்கில் குற்றவாளி இல்லை என்பதால் அவருக்கு முன்ஜாமீன் தேவையில்லை என்றும் கூறியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானுக்கு வரம்...

நெஞ்சில் மணக்கும் நினைவுகள்...

இரவில் கல்லறைக்கு பிரியாணி ஆர்டர் செய்த பெண்! டெலிவரி செய்ய மறுப்பு!

ஒரு நூலகம் மறைந்துவிட்டது!: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

பள்ளிச்சட்டம்பி படத்தின் கயாது லோஹர் போஸ்டர்!

SCROLL FOR NEXT