முகப்பு
செய்திகள்

'குயின்' தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்! ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்!

தமிழில் பாரிஸ் பாரிஸ் என்றும் கன்னடத்தில் பட்டர்ஃபிளை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் "குயின்.' விகாஸ் பெஹல் எழுதி இயக்கிய இந்தப் படம் பெண் சுதந்தரத்தைக் கதைக் களமாகக் கொண்டு உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் நடித்ததற்காக கங்கனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்நிலையில் குயின் படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. தமிழில் இந்தப் படத்தை ரேவதி, தியாகராஜன் போன்றோர் இயக்குவதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் குயின் பட தமிழ் ரீமேக்கை நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பாரிஸ் பாரிஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். குயினின் கன்னட ரீமேக்கான பட்டர்ஃபிளை படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்ப் பட வாய்ப்பும் அவருக்குக் கிடைத்துள்ளது. கன்னடத்தில் ஆறு படங்களை இயக்கியுள்ள ரமேஷ் அரவிந்த், கமல் நடித்த உத்தம வில்லன் படம் மூலமாகத் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். பாரிஸ் பாரிஸ், அவர் இயக்கும் இரண்டாவது தமிழ்ப் படம். 

எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன் இப்படத்தின் வசனகர்த்தாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றவுள்ளார். ஹிந்தியில் குயின் படத்துக்கு இசையமைத்த அமித் திரிவேதி தமிழில் இப்படத்தின் மூலம் அறிமாகவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.