முகப்பு
செய்திகள்

கபில் தேவ் கிரிக்கெட் வாழ்க்கை திரைப்படமாகிறது; ரன்வீர் சிங் கதாநாயகன்!

இந்தப் படம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியுள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:44 PM
பகிர்:

கிரிக்கெட் வீரர் கபில்தேவின் வாழ்க்கையை முன்வைத்து ஹிந்தித் திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. 

கபீர் கான் இயக்கவுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

1983 என்று படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. கபில்தேவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் இந்தப் படத்தில் 1983 உலகக் கோப்பைப் போட்டி தொடர்பான காட்சிகளே அதிகமாக இடம்பெறும் என்று அறியப்படுகிறது. அடுத்த வருட ஆரம்பத்தில் 1983 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

சச்சின், தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்த படங்கள் சமீபத்தில் வெளிவந்துள்ளன. இந்நிலையில் கபில் தேவின் வாழ்க்கையை முன்வைத்து எடுக்கப்படும் இந்தப் படம் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.