செய்திகள்

ஜேம்ஸ் கேம்ரூனின் 'அவதார் 2' படப்பிடிப்பு ஆரம்பம்!

ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், உலகளவில் ரூ. 18 ஆயிரம் கோடி ($2.79 பில்லியன்) வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை செய்தது...

எழில்

அவதார் 2 படத்தின் படப்பிடிப்பை இன்று ஆரம்பித்துள்ளார் பிரபல இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன்.

2009-ம் ஆண்டு வெளிவந்த படம் அவதார். ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம், உலகளவில் ரூ. 18 ஆயிரம் கோடி ($2.79 பில்லியன்) வசூலை அள்ளி மிகப்பெரிய சாதனை செய்தது. அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் கடந்த வருடம் அறிவித்தார். நான் காணும் கலை என்பது, துல்லியமான கற்பனை உலகம். முதல் பாகத்தை விடவும் சிறப்பாக அமையும். மிகச்சிறந்த காவியமாக உருவாகும். 3டி படமாக உருவாக்கப்படும் அவதார் 2 மற்றும் அதன் இதர பாகங்களை 3டி கண்ணாடியின்றிப் பார்க்கமுடியும் என்று கூறினார். 

டெர்மினேட்டர் படத்தின் இரு பாகங்கள், ஏலியன்ஸ், டைட்டானிக் போன்ற படங்கள் மூலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்த ஜேம்ஸ் கேம்ரூன், 3டி கண்ணாடியின்றி 3டி படம் பார்க்கமுடியும் என்று அறிவித்தது திரையுலகில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அவதார் படத்தின் அடுத்த நான்கு பாகங்களின் படப்பிடிப்பை இன்று ஆரம்பித்துள்ளார் கேம்ரூன். சேம் வொர்திங்டன், ஸோ சல்டானா, வீவர் போன்றோர் இப்படங்களில் நடிக்கவுள்ளார்கள். கேம்ரூனின் லைட்ஸ்டார்ம் எண்டர்டெயிண்மெண்ட் இப்படங்களைத் தயாரிக்கிறது. 

அவதார் படத்தின் 2-ம் பாகம், 2020, டிசம்பர் 18 அன்று வெளிவரவுள்ளது. அடுத்த மூன்று பாகங்கள் டிசம்பர் 17, 2021, டிசம்பர் 20, 2024, டிசம்பர் 19, 2025 ஆகிய நாள்களில் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT