முகப்பு
செய்திகள்

நியூயார்க்கில் நயன்தாராவுடன் இணைந்து பிறந்த நாளைக் கொண்டாடிய இயக்குநர் விக்னேஷ் சிவன்!

அவரவர் படப்பிடிப்புப் பரபரப்புகளில் இருந்து சற்று விலகி, எவ்விதத் தொந்தரவுமின்றிப் பிறந்தநாளைக் கொண்டாட...

Updated On : 18 செப்டம்பர், 2017 at 5:49 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:25 PM

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் நடித்தார் நயன்தாரா. அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். இதனையடுத்து, நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் இறுதி நாளில் பட குழுவினர் செல்பி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகிய இருவரும் ஜோடியாக செல்பி எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. பிறகு, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒன்றாக இருப்பது போன்ற மற்றொரு படமும் வெளியானது. கடந்த வருடம் சிங்கப்பூரில் நடைபெற்ற சைமா விருது நிகழ்ச்சிக்காக அந்த நாட்டுக்குச் சென்ற நயன்தாரா, விமான நிலையத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சென்றார். இந்தக் காட்சியின் வீடியோவும் படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகின.

இன்று, இயக்குநர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாள். இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நியூயார்க் சென்றுள்ளார்கள். 

Advertisement

இருவரும் அவரவர் படப்பிடிப்புப் பரபரப்புகளில் இருந்து சற்று விலகி, எவ்விதத் தொந்தரவுமின்றிப் பிறந்தநாளைக் கொண்டாட நியூயார்க் சென்றுள்ளார்கள். இந்நிலையில் அங்கு இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் எனச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.