முகப்பு
செய்திகள்

சர்வதேச அரங்கில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மெர்குரி!

இறைவி படத்தின் பின் சில சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு தற்போது பரபரப்பாக படங்களை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

Updated On : 1 ஏப்ரல், 2018 at 5:32 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:07 PM

இறைவி படத்தின் பின் சில சர்ச்சைகளில் சிக்கி அதிலிருந்து மீண்டு தற்போது பரபரப்பாக படங்களை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். பிரபு தேவா, ரம்யா நம்பீசன், சனந்த், இந்துஜா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மெர்குரி. இப்படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன். த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தால் படம் வெளிவரத் தாமதமாகலாம்.

இந்நிலையில் மெர்குரி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல் நகரில் வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ள இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படுகிறது. படக்குழுவினர் இந்த செய்தியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கமலின் பேசும் படம் போல மெர்குரியும் ஒரு மெளனப் படமாகும். SILENCE IS THE MOST POWERFUL SCREAM என்று இந்தப் படத்தின் விளம்பர வாசகம் கூறுகிறது.  

ரசிகர்களும் இந்தப் படத்தைக் காண ஆவலாக உள்ளனர். இதன் ரிலீஸ் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர் படக்குழுவினர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.