முகப்பு
செய்திகள்

'வோக் இந்தியா' அட்டைப் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இருப்பவர் யார்?

ஏப்ரல் மாத 'வோக் இந்தியா' (Vogue India) பத்திரிகையின் அட்டைப் படத்தை அலங்கரிப்பவர்கள்

Updated On : 3 ஏப்ரல், 2018 at 3:56 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:08 PM

ஏப்ரல் மாத 'வோக் இந்தியா' (Vogue India) பத்திரிகையின் அட்டைப் படத்தை அலங்கரிப்பவர்கள் இரண்டு பிரபலங்கள். ஒருவர் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். மற்றவர் சர்வ தேசப் புகழ் பெற்ற பாடகர் பாரெல் வில்லியம்ஸ்.

44 வயதான பாரெல் வில்லியம்ஸ், ஹோலி கொண்டாடுவதற்காக இந்தியா வந்திருந்தார். இந்தியாவில் ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிய வில்லியம்ஸ், அதே சந்தோஷத்துடன் சில படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனக்கு இந்தியா மிகவும் பிடித்திருப்பதாக நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார். இன்னும் சில நாட்கள் இங்கே தங்கி, காலணிகள் மற்றும் ஆடைகளை அள்ளிச் செல்ல ஷாப்பிங் செய்யவும் முடிவு செய்துவிட்டார்.

அப்போதுதான் புகழ்ப்பெற்ற பத்திரிகையான வோக் மேகஸின் அட்டைப் பட அழைப்பு விடுத்திருந்தது. உலக அழகியுடன் போஸ் தர யாருக்குத் தான் விருப்பம் இருக்காது? வெள்ளை ஆடையில் ஹோலி கறைகளுடன் தயாரானார் பாரெல் வில்லியம்ஸ். 

Advertisement

ஐஸ்வர்யா ராயைப் பொருத்தவரையில், உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தினத்திலிருந்து இன்று வரை பல பத்திரிகைகளின்  அட்டைப் படங்களை அலங்கரித்து விட்டார். அவருடைய எழில் கூடியிருக்கிறதே தவிர குறைவதில்லை. திருமணம் குழந்தைப்பேறுக்குப் பின் ஐஸ்வர்யா ராயை உடல் பருத்துவிட்டார் என்று விமரிசனங்கள் நீண்டது. அதையெல்லாம் முறியடித்து மீண்டும் பாலிவுட்டில் வெற்றிகரமாக அதே பழைய புகழுடன் வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராய். 

கடைசியாக அவர் நடித்திருந்த, 'ஏ தில் ஹை முஷ்கில்' எனும் படம் அதிகளவு பாரட்டுக்களையும் அதே சமயம் கடும் விமரிசனங்களையும் கலவையாக அவருக்குப் பெற்றுத் தந்து. தற்போது ஃபானி கான் எனும் படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

வோக் இந்தியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராயும் வில்லியம்ஸும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள்தான் வைரலாகி வருகின்றன. ஐஸ்வர்யா அழகான வெளிர் நீல நிற உடையில் காணப்பட, வில்லியம்ஸ் வெள்ளைப் பின்னணியில் பச்சை ரோஸ் என ஹோலி கறையான உடையில் காட்சியளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.