செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 'பயோபிக்'கில் சோனியா காந்தியாக நடிப்பவர் யார்?

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் 'லைஃப் ஆப் ஃபார்மர் இந்தியன் பிரைம் மினிஸ்டர்

சினேகா

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் 'லைஃப் ஆப் ஃபார்மர் இந்தியன் பிரைம் மினிஸ்டர் டாக்டர் மன்மோகன் சிங்' (Life of former Indian prime minister Dr Manmohan Singh). இது வெளிவந்த சமயத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில் இந்தப் புத்தகத்தை அடிப்படையாக வைத்து பாலிவுட்டில் 'தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' என்ற பெயரில் ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் குட்டே இயக்கியுள்ள இப்படத்தில் பிரபல நடிகர் அனுபம் கேர் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்கிறார். 

'தி ஆக்ஸிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்' படத்தில் சோனியா காந்தியாக நடிகை சுஸன்னா பெர்னெர்ட் (35) என்பவர் நடித்துள்ளார். இவர் ஜெர்மன் நடிகையாவார். இதற்கு முன் சில திரைப்படங்கள் மற்றும் இந்திய சீரியல்களில் நடித்துள்ளார். சோனியா காந்தியாக நடிப்பதில் பெருமை என்று கூறும் சுஸன்னாவுக்கு ஹிந்தி, பெங்காலி, மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளில் சரளமாக பேசத் தெரியும். 

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.  டிசம்பர் 21-ம் தேதி இப்படம் வெளியாகும் என்கிறது பாலிவுட் வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT