தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் புத்தம் புதிய படங்கள்!
இந்த வருடத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் பல புதிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன...
இந்த வருடத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று தமிழ்த் தொலைக்காட்சிகளில் பல புதிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.
ஏப்ரல் 14 அன்று சன் டிவியில் கலகலப்பு 2, தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் ஒளிபரப்பாகவுள்ளன.
சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் - தானா சேர்ந்த கூட்டம். சமீபத்தில் வெளியான இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, சதிஷ் யோகி பாபு போன்றோர் நடித்துள்ள படம் கலகலப்பு 2. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
அதேபோல விஜய் டிவியில் மதியம் 1.30 மணிக்கு துப்பறிவாளன் படமும் காலை 10 மணிக்கு வேலைக்காரன் படமும் ஒளிபரப்பாகவுள்ளன.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.
சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில், சினேகா நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் டிசம்பர் 22 அன்று வெளியானது.