செய்திகள்

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! 

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி மற்றும் இயக்குநர் ரஞ்சித் கூட்டணியில் கபாலிக்குப் பிறகு உருவாகியுள்ள படம் 'காலா'.நடிகர் தனுஷ் இந்தப் படத்தினை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்துள்ளனர்.

முன்னதாக  'காலா' திரைப்படம் ஏப்ரல் 27-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால்  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலைநிறுத்தம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் புதிய படங்கள் வெளியீட்டில் தடை நிலவி வந்தது.

இந்நிலையில் அரசின் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் விளைவாக போராட்டம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. அதன் காரணமாக புதிய படங்கள் வெள்ளிக்கிழமை முதல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் ஜூன் 7-ம் தேதி வெளியிடப்படும் என்று அதன் தயாரிப்பாளர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT