‘இங்லீஷ், விங்லீஷ்’ நடிகை சுஜாதா குமார் மரணம்!
‘இங்லீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார். கடந்த பல மாதங்களாகக் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார் சுஜாதா...
‘இங்லீஷ் விங்லீஷ்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் அமெரிக்க அக்காவாக நடித்த பாலிவுட் நடிகை சுஜாதா குமார் நேற்றிரவு காலமானார். கடந்த பல மாதங்களாகக் கேன்சரால் பாதிக்கப்பட்ட சுஜாதா, தற்போது கேன்சர் முற்றி நான்காம் நிலை மெட்டாஸ்டேடிக் கேன்சரால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. சுஜாதாவின் மரணத்தை அவரது சகோதரி சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி நேற்றிரவு 11.30 மணியளவில் ட்விட்டரில் வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார்.
சுசித்ராவின் ட்வீட்...
‘என் சகோதரி சுஜாதா குமார் நம்மை விட்டு நீங்கி விட்டார். மரணத்தால் இந்த உலகத்தைக் காட்டிலும் சிறந்ததோர் இடத்துக்கு அவரது ஆத்மா சென்றடையக் கூடும் என்றாலும் அவரில்லாத வெற்றிடத்தை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆகஸ்ட் 19, இரவு 11.26 மணியளவில் அவர் மரணமடைந்தார். அவரற்ற வாழ்க்கை மீண்டும் பழைய மாதிரி திரும்புவது கடினம்.’
Advertisement
Advertisement
நடிகை சுஜாதா குமார் 24 சீரியல்களில் பாப்புலர் நடிகையாக இருந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு அக்காவாக இங்க்லீஷ் விங்லீஷ் தவிர ராஞ்சனா மற்றும் குஜாரிஷ் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தவர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.