செய்திகள்

ரஜினியின் பேட்ட: முக்கிய விநியோக உரிமைகளைப் பெற்ற  உதயநிதி ஸ்டாலின்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது...

எழில்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, சசிகுமார், நவாசுதீன் சித்திக் போன்றோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இசை - அனிருத். பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். 

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதன் வியாபாரமும் கூடவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜியண்ட் மூவிஸ் - வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு, மதுரை, சேலம் ஆகிய பகுதிகளின் பேட்ட பட விநியோக உரிமையைப் பெற்றுள்ளார். இதை உதயநிதி ஸ்டாலினும் உறுதி செய்துள்ளார். குட்டிப்புலி படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸுடன் இணைவதில் மகிழ்ச்சி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT