செய்திகள்

ஆரவ்வுடன் 'ராஜ பீமா’ படத்துக்காக குத்து டான்ஸ் ஆடினார் ஓவியா!

பிக் பாஸ்' புகழ் ஆரவ்வும், ஓவியாவும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.

DIN

'பிக் பாஸ்' புகழ் ஆரவ்வும், ஓவியாவும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். ராஜ பீமா என்ற அந்தப் படத்தில் ஓவியா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் வெளியாகியுள்ளது. நரேஷ் சம்பத் இயக்கும் இந்தப் படத்தை எஸ்.மோகன் தயாரிக்கிறார். கோயம்புத்தூர், பாலக்காடு, பொள்ளாச்சி உள்ளிட்ட சில இடங்களில் இயற்கை காட்சிகள் கவினுற அமைந்த வெளிகளில் ஷூட்டிங் நடைபெறுகிறது

இத்திரைப்படம் மனிதன் - மிருக முரண்பாடுகளைச் சுற்றி உருவாகும் கதையம்சம் உள்ள திரைப்படம்.  முதல் மனிதன், விலங்கு சார்ந்த திரைப்படம் இதுதான் என்பது 'ராஜ பீமா என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் ஓவியா குத்துப் பாட்டுக்கு ஆரவ்வுடன் ஜோடியாக நடனம் ஆடியிருக்கிறாராம். இந்தப் பாடல் காட்சி பொள்ளாச்சியில் படமாக்கம் செய்யப்பட்டது. ஜனவரி மாதம் ஓவியா சம்பந்தப்பட்ட மேலும் சில காட்சிகள் படமாக்கப்படம் பெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT