பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய்: சமூகவலைத்தளங்களில் பரவும் புகைப்படங்கள்!
விஜய்யும் பத்திரிகையாளர்களும் பரஸ்பரம் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள்...
சர்கார் படத்தின் வெற்றியையடுத்து திரைப்படச் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜய்.
சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் சமீபத்தில் நடைபெற்ற தேங்க்ஸ்கிவிங் மீட் (Thanksgiving meet) என்கிற நிகழ்வில் விஜய்யும் பத்திரிகையாளர்களும் பரஸ்பரம் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். இந்நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
சர்கார் படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.