முகப்பு
செய்திகள்

ஒரு வெட்டும் இல்லாமல் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்ற விஸ்வாசம்!

விஸ்வாசம் படம் தணிக்கையில் ஒரு வெட்டுமில்லாமல் யு சான்றிதழ் பெற்றது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:58 PM
பகிர்:

அஜித் - சிவா ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் - விஸ்வாசம். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஜகபதி பாபு, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, கோவை சரளா போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இசை - இமான்; ஒளிப்பதிவு - வெற்றி. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படம் தணிக்கையில் ஒரு வெட்டுமில்லாமல் யு சான்றிதழ் பெற்றது. இதையடுத்து பேட்ட படத்துக்குப் போட்டியாக பொங்கல் சமயத்தில் வெளியாக விஸ்வாசமும் படமும் தயாராகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.