முகப்பு
செய்திகள்

பிப்ரவரி 9 அன்று மூன்று முக்கியமான படங்கள் வெளியீடு!

இதே பிப்ரவரி 9 அன்று அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பேட்மேன் படமும் வெளியாகவுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

இந்த வாரம் பிப்ரவரி 9 அன்று கலகலப்பு 2, சவரக்கத்தி, சொல்லிவிடவா, நரிவேட்டை என நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

மிஷ்கின், ராம் நடிப்பில் ஜிஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சவரக்கத்தி. மிஷ்கின், ராம் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ளதால் இந்தப் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், சிவா, கேத்ரின் தெரசா, நிக்கி கல்ராணி, சதிஷ் யோகி பாபு போன்றோர் நடித்துள்ள படம் கலகலப்பு 2. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். 

இதே பிப்ரவரி 9 அன்று அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள பேட்மேன் படமும் வெளியாகவுள்ளது. மாதவிலக்கு சுகாதாரத்தை வலியுறுத்தும் விதமாக, 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரித்த தமிழகத்தைச் சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் "பேட்மேன்' (Padman). இந்தப் படத்தை அண்மையில் பார்த்த பாகிஸ்தானைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற மலாலா, "இது உத்வேகம் அளிக்கும் படம்'' என்று அதன் தயாரிப்பாளரான நடிகை டிவிங்கிள் கண்ணாவிடம் நேரில் பாராட்டியுள்ளார். அக்ஷய் குமார், சோனம் கபூர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →