முகப்பு
செய்திகள்

மார்ச் 1 முதல் படங்கள் வெளிவராது, படப்பிடிப்பும் கிடையாது: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு

டிஜிடல் விநியோகக் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

டிஜிடல் விநியோகக் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளது.

தெலுங்குத் திரைப்பட துறை, டிஜிட்டல் விநியோகக் கட்டணத்தை எதிர்த்து மார்ச் 1ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்குத் தமிழ்த் திரையுலகம் ஆதரவு அளிக்கும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறியிருந்தார்.

இதையடுத்து க்யூப் நிறுவனம் உள்ளிட்ட திரைப்படத் தொழில்நுட்ப நிறுவனங்கள், டிஜிட்டல் விநியோகத்துக்கு அதிகக் கட்டணம் விதிப்பதால் அதை எதிர்த்து தற்போது மார்ச் 1 முதல் தமிழ்த் திரையுலகமும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

இதனால் மார்ச் 1 முதல் திரைப்படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறாது, புதிய படங்களும் வெளியிடப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →