செய்திகள்

ஈஷா சிவராத்திரி பூஜையில் நடனமாடிய தமன்னா! வைரலாகும் விடியோ!

சிவ பக்தையான தமன்னா தனக்கு நேரம் கிடைக்கும் போது திருவண்ணாமலை உள்ளிட்ட பல சிவன் கோவில்களுக்கு தமன்னா சென்று பூஜை செய்வார். 

ராக்கி

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை கோலாகலமாக கொண்டாடி வருகிறது ஈஷா. இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக நடிகை தமன்னாவும் பூஜையில் கலந்து கொண்டார். சிவ பக்தையான தமன்னா தனக்கு நேரம் கிடைக்கும் போது திருவண்ணாமலை உள்ளிட்ட பல சிவன் கோவில்களுக்கு தமன்னா சென்று பூஜை செய்வார். 

அண்மையில் தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இவ்வாறு கூறினார், ‘இது எனக்கு மறக்க முடியாத சிவராத்திரி. ஒவ்வொரு நொடியிலும் ஆனந்தமாக உணர்ந்தேன். சத்குருவுடன் இந்த வருட மகாசிவாராத்திரியை கொண்டாடியதில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். ஈஷாவில் உள்ள தன்னார்வ தொண்டர்களைப் பற்றி குறிப்பிட்டே ஆகவேண்டும். எவ்வித எதிர்ப்பார்ப்பும் இன்றி ஆத்மார்த்தமாகவும் சந்தோஷமாகவும் அவர்கள் செய்யும் இந்தப் பணி மகத்தானது. அவர்களுக்கும் நன்றி, சத்குருவுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை’ என்று பகிர்ந்துள்ளார் தமன்னா.

புகழ்ப் பெற்ற நடிகை, நகைக் கடை அதிபர் என்பதைத் தாண்டி, தமன்னாவின் இந்த ஆன்மிக ஈடுபாடு அவருக்கு மன அமைதியை தருகிறது என்கிறது தமன்னா வட்டாரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தா்கள் தரிசனம்

மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கிய கோயிலின் தடயங்கள் கண்டுபிடிப்பு!

SCROLL FOR NEXT