செய்திகள்

இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை அடையுமா பேட்மேன்?

முதல் வாரம் இந்தியாவில் ரூ. 63 கோடி வசூலித்த பேட்மேன் படம், இரண்டாவது வார இறுதியில் மிகக்குறைவான வசூலையே அடைந்துள்ளது...

எழில்

முதல் வாரம் இந்தியாவில் ரூ. 63 கோடி வசூலித்த பேட்மேன் படம், இரண்டாவது வார இறுதியில் மிகக்குறைவான வசூலையே அடைந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று ரூ. 2.10 கோடியும் சனியன்று ரூ. 3.15 கோடியும் ஞாயிறன்று ரூ. 3.78 கோடியும் மட்டுமே வசூலித்துள்ளது பேட்மேன். முதல் வார வசூலுடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு. இதுவரை ஒட்டுமொத்தமாக ரூ. 72 கோடி வசூலித்துள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இத்தகவல்களை பாலிவுட் விமரிசகர் தரன் ஆதர்ஷ் ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழரும் பிரபல இயக்குநருமான பால்கி இயக்கத்தில் உருவான 'பேட்மேன்' (PadMan) என்கிற ஹிந்திப் படம் சமீபத்தில் வெளியானது. அக்‌ஷய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழகத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் எப்படி சானிடரி நாப்கின் தயாரித்தார் என்பது பற்றிய உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. நடிகை டிவிங்கிள் கண்ணா இப்படத்தின் தயாரிப்பாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“House No: 0! ஒரே வீட்டில் 80 வாக்காளர்கள்! சிரிக்காதீங்க!” ஆதாரங்களுடன் ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

சீனாவுக்கு 3 மாதம்; இந்தியாவுக்கு 3 வாரம்! அமெரிக்காவுக்கும் 50% வரிவிதிக்க காங்கிரஸ் கோரிக்கை!

உடை தாங்கும் இடை... அமைரா தஸ்தூர்!

சின்ன திரை வரலாற்றில் முதல்முறை.... திரிவேணி சங்கமமாகும் 3 தொடர்கள்!

SCROLL FOR NEXT