செய்திகள்

இந்தியாவின் விருந்தோம்பலை விரும்புவீர்கள்: கனடா பிரதமரை வரவேற்கும் ஏ.ஆர். ரஹ்மான்

எழில்

இந்தியாவில் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் ஒரு வார கால சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. தனது குடும்பத்தினருடன் கனடா பிரதமர், தாஜ்மகாலுக்குச் சென்று சுற்றி பார்த்தார். தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு வந்த ஜஸ்டின் தனது குடும்பத்தினருடன் இந்திய பாரம்பரிய உடையணிந்து, மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்குச் சென்று பார்வையிட்டார். தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் 23ம் தேதி ஜஸ்டின் ட்ரூடோ முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது தலைவர்கள் இருவரும், இந்தியா, கனடா இடையே பாதுகாப்பு விவகாரம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றில் நிலவும் உறவை விரிவுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில் இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்வீட் செய்ததாவது: 

இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடோவை வரவேற்கிறேன். அருமையான நினைவுகளுடன் கூடிய பயணம் அமைய வாழ்த்துகள். இந்தியாவின் விருந்தோம்பலை நீங்கள் மிகவும் விரும்புவீர்கள் என எண்ணுகிறேன் என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT