முகப்பு
செய்திகள்

தமிழரின் நம்பிக்கை இனி நீ: கமலுக்கு சின்னி ஜெயந்த் ஆதரவு!

நன்மை செழிக்க செங்கோல் எடுத்தாய்தன்மை தவழும் தலைவன் ஆனாய்தமிழைத் தாங்கும் தளபதி நீயாய்தமிழகம் போற்றும் தலைவன் நீயாய்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:19 PM
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியான மக்கள் நீதி மய்யத்தின் பெயரை மதுரையில் புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார்.

இந்நிலையில் கமலின் அரசியல் பிரவேசத்துக்கு நடிகர் சின்னி ஜெயந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள கவிதை வடிவிலான அறிக்கையில் கூறியதாவது:

வையம் வியக்க மையம் தந்தாய்
மக்கள் ஐயம் தீர்க்கும் உருவாய் நின்றாய்
உண்மை பிறக்க தாயாய் வந்தாய்
நன்மை செழிக்க செங்கோல் எடுத்தாய்
தன்மை தவழும் தலைவன் ஆனாய்
தமிழைத் தாங்கும் தளபதி நீயாய்
தமிழகம் போற்றும் தலைவன் நீயாய்
தமிழரைக் காக்கும் தலைமகன் ஆவாய்
தாவிக் குதிக்கும் மகிழ்ச்சியின் உள்ளே
ஆட்டம் போட இடம் வேண்டும் தள்ளே
எங்கள் நாயகன் ஆனார் நம்மவர் என்றே
நாளை தமிழகம் நீ என்கிறேன் இன்றே
தமிழரின் நம்பிக்கை இனி நீ ஒன்றே
வா வா என் தலைவா
வரவேற்று வணங்கி வாழ்த்துகிறேன் 
அன்பு தம்பி சின்னி
நீ தானே நாளை தமிழகமே இனி...

அன்புடன்
தம்பி சின்னி ஜெயந்த்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.