முகப்பு
செய்திகள்

வைகைப் புயல் வடிவேலு இப்படிச் செய்யலாமா? வருத்தத்தில் தயாரிப்பாளர்கள்!

மீம்ஸ்களின் பிதாமகன் வடிவேலு என்று சொல்லும் அளவுக்கு மீம்ஸ் உருவாக்குபவர்களின்

Updated On : 23 பிப்ரவரி, 2018 at 4:38 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:49 PM

மீம்ஸ்களின் பிதாமகன் வடிவேலு என்று சொல்லும் அளவுக்கு மீம்ஸ் உருவாக்குபவர்களின் கற்பனைகளுக்கு தம் விதவிதமான முகபாவத்தில் உயிர் கொடுப்பவர் வைகைப் புயல் என்றும் கருப்பு நாகேஷ் என்றும் ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் வடிவேலு.

குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அவரது நகைச்சுவையில் கட்டுண்டு கிடப்பார்கள். அவரது உடல்மொழியும், குரல் மாடுலேஷனும் அனைவரையும் வெகுவாக ரசிக்க வைக்கும். 

அரசியல் காரணங்களுக்காக சில காலம் திரையில் தோன்றாமல் இருந்த வடிவேலு, மீண்டும் எலி, கத்திச் சண்டை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார். புயல் எப்ப வந்தாலும் நாங்க ரசிப்போம் என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தனர். கடந்த ஆண்டு நடிகர் விஜயுடன் வடிவேலு நடித்த மெர்சல், அவருக்கு மீண்டும் நல்ல பெயர் பெற்றுத் தந்தது. 

Advertisement

அவ்வ்வ்வ்வ்வ்

ஆனால் அண்மையில் வடிவேலு சில திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு தேதி கொடுத்தும் படப்பிடிப்புக்கு வராமல் பிரச்னைகளையும் பண நஷ்டத்தையும் ஏற்படுத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2’ படத்தின் ஃபோட்டோ ஷூட் நடந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் படப்பிடிக்கு வர மறுத்துவிட்டார் வடிவேலு. அவர் மீது ஷங்கர் புகார் தந்தும், இதுவரை அவருக்கு வழங்கப்பட்ட அட்வான்ஸ் திருப்பித் தரப்படவில்லை. மேலும் இன்னொரு பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருந்த வடிவேலு அப்படத்தின் காட்சிகளை மாற்று அமைக்கும்படி இயக்குநரை வற்புறுத்தி வருவதாகவும் ஒரு புகார் அவர் மீது எழுந்தது. 

நானா தான் வாயக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா?

இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் வடிவேலு. ஆர்.கேயின் தயாரிப்பில் உருவாகிவரும் த்ரில்லர் படமான ‘நானும் நீயும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகியிருந்தார். அவருக்கு ரூ.75 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் குறித்த தேதியில், பல முறை நினைவு படுத்தியும் படப்பிடிப்புக்கு வடிவேலு வருவதில்லை என்று படக்குழுவினர் சங்கடத்தில் ஆழ்ந்தனர். பட நிறுவனம் வடிவேலுவின் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தும் வடிவேலு தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

வடிவேலுவை மீண்டும் திரையில் காண ஆவலாக இருக்கும் ரசிகர்களுக்கு இது கடும் அதிருப்தியை தந்துள்ளது. வடிவேலுவே இப்படிச் செய்யலாமா என்று மீம்ஸ் பதிவு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.