நடிகர் தனுஷின் பாராட்டைப் பெற்ற பெண் யார்?
நடிகர் தனுஷ் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் இணைப்பில் இருப்பவர். அண்மையில் காலா ரிலீஸ்
நடிகர் தனுஷ் தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் வடசென்னை மற்றும் கெளதம் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் இணைப்பில் இருப்பவர் தனுஷ். அண்மையில் காலா ரிலீஸ் செய்தியை தனது டிவிட்டரில் பகிர்ந்தார். அதன் பின் மகா சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
தற்போது விமானத்தில் ஏறும் அவனி சதுர்வேதியின் புகைப்படத்தை பகிர்ந்து, பெருமிதம் கொள்வதாக ட்வீட் செய்துள்ளார் தனுஷ்.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான 'மிக்-21 பைசன்' ரக போர் விமானத்தை தனியாக இயக்கியிருப்பவர் அவனி சதுர்வேதி என்ற பெண் விமானி. இந்தச் சாதனை மூலம், போர் விமானத்தில் தனியாகப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் விமானி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
Advertisement
அவனி விமானத்தில் ஏறும் காட்சியை பதிவேற்றி PROUD எனக் கூறி தனுஷ் அவரை பாராட்டியுள்ளார். சச்சின் டெண்டுல்கர், அமீர்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்தியுள்ளார்கள்.
மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ள தேவ்லாந்து என்னும் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்த்தவர் அவனி சதுர்வேதி. இவர், விமானப் படையின் போர் விமானத்தில் தனியாகப் பயணிக்கப்போகும் முதல் பெண்ணாக தாம் வருவோம் என்று ஒருபோதும் நினைக்கவில்லை.
விமானப் படையில் சேர்ந்த அவர், கடந்த 2016-ம் ஆண்டு அடிப்படைப் பயிற்சிகளை முடித்த பிறகு, போர் விமானப் படையில் இணைந்தார். அவனி சதுர்வேதி உள்பட 3 பெண் விமானிகளுக்கு போர் விமானத்தில் தனியாகப் பறப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜாம்நகர் விமானப் படைத் தளத்தில் இருந்து 'மிக்-21 பைசன்' ரக போர் விமானத்தில் சுமார் 30 நிமிடங்கள் தனியாகப் பயணம் செய்து அவனி சதுர்வேதி சாதனை படைத்தார். இவரது சாதனைக்கு விமானப் படைத் தலைமைத் தளபதி பி.எஸ்.தனோவாவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'மிக்-21 பைசன்' போர் விமானத்தில் தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்த அவனி சதுர்வேதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண் விமானிகளுக்கு சம வாய்ப்பு வழங்குவதில் இந்திய விமானப் படை எப்போதும் முன்னணியில் உள்ளது' என்றார் அவர்.