முகப்பு
செய்திகள்

ஸ்ரீதேவி மீது மக்கள் வெளிப்படுத்திய அன்பு: சுஷ்மிதா சென் நெகிழ்ச்சி!

மணிக்கணக்கில் வரிசையில் நின்று ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

துபையில் உறவினர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினருடன் சென்ற ஸ்ரீதேவி நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக முதலில் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மயங்கிய நிலையில் குளியல் அறைத் தொட்டியில் மூழ்கி இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை சுஷ்மிதா சென், ட்விட்டரில் கூறியதாவது:

மணிக்கணக்கில் வரிசையில் நின்று ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். படங்களுடனும் மலர்களுடனும் கூட அவர்கள் வந்திருந்தார்கள். ஸ்ரீதேவி மேடம் மீது மக்கள் வைத்துள்ள அன்பு நெகிழ வைத்துள்ளது. கொண்டாட்டமான வாழ்க்கை அவருடையது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.