செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள காலா மற்றும் 2.0 படங்களின் ரிலீஸ் எப்போது?

சினேகா

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற பரபரப்பான சூழல் முடிவடைந்து அவர் அரசியல் பிரவேசம் குறித்த அனைத்து சர்ச்சைகளும் முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு அவர் நடிப்பில் உருவான இயக்குநர் ஷங்கரின் 2.0 மற்றும் பா. இரஞ்சித் இயக்கத்தில் காலா ஆகிய படங்கள் எப்போது வெளிவரும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ள காலா தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியாகவிருக்கிறது. கபாலி படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஹிமா குரேஷி, சமுத்திரக்கனி, நானா படேகர், பங்கஜ் திரிபாதி,  ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

ரஜினியின் பிறந்தநாளையொட்டி 2017-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இறுதி கட்ட படப்பிடிப்பு பணியில் என்று காலா படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கிவிட்டன. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிவரும் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் 2017-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் அப்போதே '2.0' பட ரிலீஸ் அறிவித்தபடி நடைபெறுமா என்ற சந்தேகம் படக்குழுவினருக்கு இருந்தது. முன்னதாக 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவிருந்த படமானது, கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 2018, 26-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாட் மேட்' என்ற படமும் அதே மாதம் வெளியாகவிருந்ததால், 2.0 படத்தில் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. இது ரஜினி ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. சிஜி உள்ளிட்ட சில ஃபோஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மட்டுமே பாக்கி உள்ளது. தமிழ் புத்தாண்டில் காலா வெளியிடப்படலாம் என்பதால், ஏப்ரல் 27-ம் தேதி 2.0 வெளியிடப்படும் என்கிறது கோலிவுட் வட்டாரம். 

ரஜினி அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்ட நிலையில் இந்தப் படங்களின் ரிலீஸுக்குப் பின் புதிய படங்களில் அவர் நடிப்பாரா என்பதும் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT