50 வயதில் சல்மா ஹயக் போல இருக்கவேண்டும்: நடிகை கஸ்தூரி விருப்பம்!
என்னுடைய புத்தாண்டுத் தீர்மானம் - எனக்கு 50 வயதாகும்போது சல்மா ஹயக் போல காட்சியளிக்கவேண்டும்...
ட்விட்டரில் மிகவும் தீவிரமாகக் கருத்துகளைத் தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி, தான் 50 வயதில் ஹாலிவுட் நடிகை சல்மா ஹயக் போலக் காட்சியளிக்கவேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:
என்னுடைய புத்தாண்டுத் தீர்மானம் - எனக்கு 50 வயதாகும்போது சல்மா ஹயக் போல காட்சியளிக்கவேண்டும். நீச்சலில் ஈடுபடவேண்டிய நேரமிது என்று ட்வீட் செய்ததோடு சல்மா ஹயக்கின் இந்தப் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
சல்மா ஹயக்குக்குத் தற்போதைய வயது - 51. கஸ்தூரிக்கு 41 வயது.