முகப்பு
செய்திகள்

மகள் பிறந்த நாளன்று நடிகர் அஜித் செய்த நல்ல காரியம்!

நடிகர் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Updated On : 4 ஜனவரி, 2018 at 3:32 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:24 PM

நடிகர் அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஜனவரி 3-ம் தேதி அவரது மகள் அனோஷ்காவின் பிறந்த தினத்தை அஜித் குடும்பம் எளிமையாகக் கொண்டாடினர். 

அனோஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு வீட்டினருக்கும் நண்பர்களுக்கும் பிரியாணி விருந்து அளித்தார் அஜித். தவிர, நீலாங்கரை அருகே உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கும் பிரியாணி பார்சல் அனுப்பியுள்ளார்.

இது குறித்து அந்த குழந்தைகள் காப்பகத்தின் நிர்வாகி தனது ஃபேஸ்புக்கில் நெகிழ்ச்சியாக இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கூறியுள்ளார்.

Advertisement

இதை அறிந்த அஜித் ரசிகர்கள் தங்கள் தலயின் தங்க மனதை நினைத்து மகிழ்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.