செய்திகள்

தமிழ்நாட்டின் செல்லக்குரலைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள் யார்?

சூப்பர் சிங்கர் 6 பட்டத்தை வெல்பவருக்கு என் இசையில் பாட வாய்ப்பளிக்கப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார் ரஹ்மான்...

எழில்

விஜய் தொலைக்காட்சியில் ஜனவரி 21 முதல் சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும். 

இந்தமுறை ரஹ்மானும் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருப்பது ஆச்சர்யமான மாற்றம். சூப்பர் சிங்கர் 6 பட்டத்தை வெல்பவருக்கு என் இசையில் பாட வாய்ப்பளிக்கப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார் ரஹ்மான். இதனால் இந்நிகழ்ச்சிக்குக் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தமுறை உன்னி கிருஷ்ணன், ஸ்வேதா மோகன், பென்னி தயால், அனுராதா ஸ்ரீராம் என திரையுலகைச் சேர்ந்த பாடகர்கள் நடுவர்களாகச் செயல்படவுள்ளார்கள்.

இதுவரை நடந்த ஐந்து சூப்பர் சிங்கர் போட்டிகளில் சாய் சரண், நிகில் மேத்யூ, அஜீஸ், திவாகர், ஆனந்த் அரவிந்தாக்‌ஷன் உள்ளிட்டோர் வெற்றியாளர்கள் ஆகியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

மேலக்கல்லூரில் இருவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 7 போ் கைது

பேங்க் ஆப் பரோடா சாா்பில் மாநகராட்சிக்கு பொக்லைன் இயந்திரம்

SCROLL FOR NEXT